\
Advertisement
திருச்சி மாநகரில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள், மோட்டார் வாகன பிரிவு காவலர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து காவல்துறை வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கே. கே. நகரில் உள்ள மாநகர ஆயுதப் படை சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Advertisement
இச்சிறப்பு கண் பரிசோதனை முகாம் திருச்சி ஜோசப் தனியார் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. இச்சிறப்பு கண் பரிசோதனை முகாமில் பங்கு பெற்ற காவல் ஆளினர்கள், மோட்டார் வாகன பிரிவு காவலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு விதமான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இம்முகாமில் காவல்துறை ஆளினர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் கண் பரிசோதனை முகாமில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் அ. பவன்குமார் ரெட்டி, குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் வேதரத்தினம், காவல் உதவி ஆணையர்கள் போக்குவரத்து ஒழுங்கு சரகம்(தெற்கு மற்றும் வடக்கு), காவல் உதவி ஆணையர்கள் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆளினர்கள், மோட்டார் வாகன பிரிவு காவலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இந்த கண் பரிசோதனை முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர். இம்முகாமை நடத்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்கள்.
Advertisement
Comments