திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வினோத் கண் மருத்துவமனை இணைந்து சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.
இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கக்கூடிய ஓட்டுநர்கள், ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கியமாக ஓட்டுநர்கள் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வினோத் கண் மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments