Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

“டோக்கியோவினை நோக்கி சாலை” வினாடி வினா போட்டி – திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் 23.07.2021 முதல் 08.08.2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் – வீராங்கனைகள் மேசைப்பந்து போட்டியில் ஜி.சத்தியன் மற்றும் அ.சரத்கமல் ஆகியோரும், வாள் சண்டையில் சி.ஏ.பவானிதேவியும், பாய்மரப் படகோட்டுதலில் கே.சி.கணபதி, வருண்அ.தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள்.

மேற்கண்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “டோக்கியோவினை நோக்கி சாலை” என்ற தலைப்பில் அனைத்து வயது பிரிவினருக்குமான ஒலிம்பிக் வினாடி வினா போட்டி 23.06.2021 முதல் 22.07.2021 வரை https://fitindia.gov.in என்ற இணையதள முகவரியில்            

Road to Tokyo 2020 Quiz இல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
வினாடி வினா போட்டியின் வழிமுறைகள்
போட்டிகள் 120 வினாடிகள் (2 நிமிடம்) மட்டுமே நடைபெறும் போட்டியில் 10 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இடம் பெற்றிருக்கும். வினாவானது ஒலிம்பிக் வரலாறு, விளையாட்டுத் தொடர்பான கேள்விகள், முன்னாள் வீரர் – வீராங்கனைகள் பெற்ற சாதனைகள், உலக சாதனைகள், கடந்த மற்றும் தற்போதய சாதனைகள் மற்றும் சாதனையாளர்கள் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

போட்டியில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கு பெற முடியும். தினமும் போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு இந்திய அணியின் ரசிகர்களுக்கான ஜெர்சி ஒன்று பரிசாக வழங்கப்படும். நமது தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தின் முன்பு ஜுலை 22-ந் தேதி வரை ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் ஏற்படுத்தி வீரர் – வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒலிம்பிக் வினாடி – வினா போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி ( தொலைபேசி எண் : 0431-2420685 ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *