திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் 4 வது தெருவில் முஹம்மது ஜயீத் என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் திருச்சிக்கு வந்தார்.
இந்நிலையில் தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அழைத்து கொண்டு பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளையடிக்கபட்ட நகைகளின் மதிப்பு சுமார் 35 சவரன் என கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments