திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாரதி வயது 45)மணப்பாறை பகுதியில் மரம் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் விஷயமாக தனது சொந்த காரில் திருச்சி கருமண்டபம் பகுதியில் கட்டிடங்களுக்கு மரங்கள் சப்ளை செய்துவிட்டு அதில் வசூல் செய்த ரூபாய் 3 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மணப்பாறைக்கு திரும்பி உள்ளார். மணப்பாறை அடுத்த திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை முத்தப்புடையான்பட்டி அருகே நான்கு நபர்கள் 2 இருசக்கர வாகனத்தில் காரை வழிமறித்து தாங்கள் போலீஸ் எனவும், மப்டியில் வாகன சோதனை செய்வதாகவும்,
காரை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி சோதனை செய்து காரில் வைத்திருந்த 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, காரை எடுத்துக் கொண்டு வரக் கூறி கண் இமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். பணத்தை பறிகொடுத்த பாரதி மணப்பாறை காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளார். புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறைத்து போலீசார் எனக்கூறி பணம் பறித்து சென்ற கும்பலால் வாகன ஓட்டியில் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments