ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை சங்கத்தின் ஆசை மகள் திட்டத்தின் கீழ் பீரங்கி குளம் இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையத்திற்கு சென்று அங்கிருந்த 35 கர்ப்பிணி பெண்களுக்கு 6000 மதிப்பிலான சத்து மிக்க உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரோடேரியன் ஜெயந்த் மேத்தா, ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை சங்கத்தின் தலைவி காஞ்சனா ஆனந்த் மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையத்தின் மருத்துவர் சித்ரா மற்றும் எம் சி ஹெச் ஓ உஷாராணி கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
மேலும் இச்சங்கத்தில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments