திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் பிரவீன்குமார் (32). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட்டில் திருச்சி- சேலம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பிரவீன்குமாரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
இதில் பிரவீன்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீன்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
8 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments