Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு இலவசமாய் சிகிச்சை அளிக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனை

திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் (ROYAL PEARL HOSPITAL) மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை இலவசமாக செய்ய முன்வந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நாராயணன் ஜானகிராம் அவர்கள் கூறுகையில்… உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இன்றைக்கு அதிகமாக கொரோனா தொற்றோடு இணைந்து கருப்பு பூஞ்சை பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

மியூகோமிகோஸிஸ் அல்லது கருப்பு பூஞ்சை என்பது ஒருவகை பூஞ்சை தொற்று நோய் ஆகும். இந்த நோய்த்தொற்றுக்கு அறுவை சிகிச்சை மூலமே தீர்வு காண முடியும். நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுவாகவே இந்த சிகிச்சைக்காக 5 முதல் 10 லட்சம் வரை செலவாகின்றது. இதுவரை 70 முதல் 80 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அவர்களில் பலர் 10 லட்சத்திற்கும் மேலாக செலவு செய்துள்ளனர். அதை கருத்தில் கொண்டு இனிவரும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டணமில்லா சிகிச்சையை தொடங்கியுள்ளோம்.

இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிடும் ஒரு முயற்சியாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு எவ்வித கட்டணமுமம் பெறாமல் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளோம். பொதுவாகவே இந்த பூஞ்சை தொற்று கொரானா நோயாளிகளுக்கு அதிகம் ஏற்படுகிறது, இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகிறது.
கொரானா நோயாளிகளுக்கு அதிக அளவு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதால் அந்நேரத்தில் அவர்களுக்கு மயக்க மருந்து (Anesthesia) கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 14 நாட்களுக்கு மேல் தான் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும். எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடியும் வரை ஆலோசனை அல்லது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு எவ்வித கட்டணமும் நோயாளிகள் வழங்க தேவையில்லை. ஆனால் நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை மட்டும் அவர்களே வாங்கி வரவேண்டும். அதுமட்டுமின்றி எம்ஆர்ஐ ஸ்கேன் MRI SCAN எடுப்பது கட்டாயம். RTPCR இல் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாகி இருப்பதும் அவசியம்.

பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றோம். அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஆம்போடெரிசின் (Amphotericin) ஊசிப்போடுதல் அவசியம். எங்களிடம் தற்போது கையிருப்பில் 1000 ஆம்போடெரிசின் (Amphotericin) மருந்துகள் உள்ளது. கொரோனா பாதித்து குணம் அடைந்த பின்னரே இந்த நோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அதிக அளவு கருப்பு பூஞ்சை தொற்று கண்களை பாதிக்கிறது. சில நேரங்களில் சிலருக்கு கண்கள் அழுகும் சூழல் ஏற்படுமாயின் அவர்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாக இருப்பின் உடனடி சிகிச்சை அளித்து வருகின்றோம் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *