தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் சு.ஞானசேகர் ( அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் உறையூர்) மோகனசுந்தரம் ( திருச்சி இந்து சமய அறநிலையத்துறை) சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளர் லட்சுமணன் மற்றும் செயல் அலுவலர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
பக்தர்கள் கடந்த 16 நாட்களாக கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூபாய் 1 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 396 ரொக்கமும், 3 கிலோ 481 கிராம் தங்கமும், 5 கிலோ 430 கிராம் வெள்ளியும், 174 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என்று கோயிலின் செயல் அலுவலரும், இணை ஆணையருமான கல்யாணி தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments