சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ 1 கோடி ரொக்கம், 1 கிலோ 609 கிராம் தங்கம் காணிக்கை
சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.
அப்படி கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.இதில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 05 லட்சத்து 32 ஆயிரத்து 391 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 609 கிராம் தங்கமும், 3 கிலோ 752 கிராம் வெள்ளியும் மேலும், 115 அயல் நாட்டு பணம் மற்றும் 1100 அயல் நாட்டு நாணயங்களும்,
உப கோவில்களாக விளங்கும் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 888 ரொக்கமும், உஜ்ஜயினி ஓம்காளிஅம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ. 9 ஆயிரத்து 041 ரொக்கமும் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments