தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டி சேர்ந்த கேங்மேன் ராஜீவகாந்தி (ஒப்பந்த தொழிலாளர்) திருச்சி மலைகோட்டை பிரிவில் பணிபுரிந்தார்.
அப்போது ராஜீவ்காந்தியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மிளகு பாறை 110kv ssயில் பணி செய்ய உயர் அதிகாரி வாய் மொழி உத்தரவு சொன்னதால், பணி செய்து கொண்டு இருந்த போது மின் விபத்து எற்பட்டு காவேரி மருத்துவமனையில் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கபட்டார்.
உயர் அதிகாரி உத்தரவால் பணியில் செய்த போது முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் பணியில் ஈடுபட வைக்கவில்லை என தகவல் ஊழியர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரிகள் சொந்த செலவில் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி பணியின் போது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட கேங்மேன் ராஜீவ் காந்தி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் குடும்பத்தார் அவருடைய உடலை வாங்க (காவேரி மருத்துவமனை) முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டுமென பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர். புதிய தமிழகம் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மின்வாரிய அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தியின் பெயர் சிகிச்சையின் போது மருத்துவமனை பதிவேடுகளில் அழிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டி குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மரணத்திற்கு மின்வாரிய உயர் அதிகாரிகளை காரணம் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இனிமேல் கேங்மேன் யாரும் இதுபோன்று பணியின்போது உயிரிழக்கக் கூடாது என்ற ஆதங்க குரலையும் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments