திருச்சி மனிதம் சமூகப் பணி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கதிரொளி 2025 கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சிவா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், முதியவர்கள், தன்னார்வலர்கள் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் வைத்து சூரியனை வணங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் முதியோர்களுக்கு புத்தாடைகளும் பொங்கலும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு வழங்கப்பட்ட பிறகு, முதியோர்களுக்கும், அலுவலர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இறுதியாக நன்றியுரை கூறி பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments