திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாககும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் சு. ஞானசேகர் ( அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் உறையூர்) மோகனசுந்தரம் ( திருச்சி இந்து சமய அறநிலையத்துறை ) சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளர் ம.லட்சுமணன் மற்றும் செயல் அலுவலர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
பக்தர்கள் கடந்த 6 நாட்களில் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூபாய் 46 லட்சத்து 63 ஆயிரத்து 853 ரொக்கமும், 1 கிலோ 007 கிராம் தங்கமும், 1 கிலோ 160 கிராம் வெள்ளியும், 19 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் செயல் அலுவலரும் இணை ஆணையருமான சி.கல்யாணி தகவல்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments