Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகளை கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் 83 லட்சத்து 2 ஆயிரத்து 982 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 827 கிராம் தங்கமும், 2 கிலோ 759 கிராம் வெள்ளியும், 114 அயல் நாட்டு நோட்டுகள், 696 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணையானையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம் :

1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.

2. சி.கல்யாணி, இணைஆணையர் / செயல் அலுவலர்.

3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

4. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.

6. ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி

7. ப.இராணி துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர், நாகப்பட்டினம்.

8. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்.

9. நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்.

10. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *