திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சமயபுரம் நால்ரோடு முதல் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகம் வரை பேரணியாக வந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது… உள்ளூர்வாசிகளை கோவிலுக்குள் கட்டணம் இன்றி அனுமதிக்க மறுக்கும் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், கோவிலுக்குள் செல்ல கிழக்கு வாசலை அனுமதிக்க வேண்டும். சுகாதார சீர்கேட்டையும் முறையற்ற நிர்வாகத்தையும், கட்டணம் செலுத்தி தரிசிக்கும் பக்தர்களுக்கு எந்தவித பிரசாதம் வழங்கப்படவில்லை. உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணிடம் மனு அளித்தனர்.
இந்த கோரிக்கைகளை ஒரு வார காலத்தில் நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் மனுவை கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கூறுகையில்… உள்ளூர் மக்களை தரிசனம் செய்வதற்கு இலவசமாக அனுமதிக்க கூடாது என இரு அமைச்சர்கள் உத்தரவிட்டதன் பேரிலேயே தான் செயல்படுவதாக இணை ஆணையர் கூறியுள்ளார்.
அப்படி ஒரு உத்தரவை அமைச்சர்கள் கூறி இருந்தால் அமைச்சர்கள் மீது கடுமையான கண்டனங்களை தெரிவிப்போம் என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments