திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்றனர்.
மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னதாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திரண்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கோவில் நுழைவாயில் முன்பு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சமயபுரம் நால்ரோடு வரை நடந்து சென்று அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் உற்சாக ஆரவாரத்துடன் மாநாடு திடல் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் வாகனங்கள் மூலம் மாநாடு திடல் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இந்த மாநாட்டை முன்னிட்டு மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
அவ்வாறு மாநாட்டிற்காக புறப்பட்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் சமயபுரம் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments