திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தல் கொள்ளிடம் ஆற்று பகுதியில் லால்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் லால்குடி அருகே கூகூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (43) என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட 4 மூட்டை மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments