திருச்சி மாவட்டம் சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் ஆண், பெண் என மொத்தம் 74 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை பேரூராட்சி நிர்வாகம் அதிகாரிகள் வழங்காததால் 15 வார்டு உள்ள குப்பைகளை தினத்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அள்ளி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் கையுறை, முககவசம் இல்லாமல் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொற்று நோய்க்கு ஆளாகி வருவதாகவும், இவர்களால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் தூய்மை பணியாளர்களின்
நலனின் அக்கறை கொண்டு பேரூராட்சி நிர்வாகம் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments