திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர் கோயில் அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலைய அமைச்சர் அறிவுரைப்படியும் இந்த தோப்பை சமன்படுத்தி இன்று சுமார் 1008 மரக்கன்றுகளை நட்டனர்.
ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஈசான்ய மூலையில் பூஜை நடத்தப்பட்டது, சென்னையை சேர்ந்த உபயதாரர் தெய்வ ஜோதி என்பவர் உபயமாக அளிக்கப்பட்ட 1008 மரக்கன்றுகளிலில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முதல் மரக்கன்றாக ஸ்ரீரங்கம் கோயில் தலவிருட்சமான புண்ணண மரக்கன்றை நட்டு வைத்தார்.
பின்னர் திருச்சி – பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரான அரங்க சுதர்சன் நாகவல்லி மரக்கன்றை நட்டு வைத்து மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments