Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை- ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது… 

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும். இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தொகை நேரடியாக மனுதாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவை புதுப்பித்தும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும்.

மாற்றுத்திரனாளிகளுக்கு வயது, தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு, அடயாள அட்டை (பழையது) மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online: Printout, போன்றவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்ற வேலைவாய்ப்பு அடையான அட்டை (பழையது). அசல் கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *