திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு தேனுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் விவசாயி. இவரது மகன் நித்திஷ் பாண்டி .இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலையில் நித்திஷ் பாண்டி வீட்டு அருகே உள்ள முருகன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த நித்திஷ் பாண்டியை அப்பகுதியினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நித்திஷ் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷம் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments