தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் சேலத்தில் அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தர்மபுரி அருகே காரில் சென்று கொண்டிருக்கும் பொழுதே அமைச்சர் தனக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக தர்மபுரி மருத்துவமனையில் தற்பொழுது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அமைச்சர் மகேஸ் உடன் இருப்பவர்கள் அவருக்கு சிறிய சோர்வு அதனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நெஞ்சுவலி ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இது இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments