திருச்சி கருமண்டபம் விநாயக நகரைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ் மனைவி சசிகலா, Joy Manase (14) வயது ஒரு மகனுடன் மூன்று வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த (07.12.2023) அன்று காலை 8:30 மணிக்கு தினசரி வரும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றான். ஆனால் திரும்ப வீட்டிற்கு தினசரி வரும் ஆட்டோவில் வராமல் தனக்கு ஸ்பெஷல் வகுப்பு இருக்கிறது அதனால் வகுப்பு முடித்து வீட்டிற்கு பேருந்தில் வருவதாக ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
இரவு 7 மணி ஆகியும் மகன் வீட்டிற்கு வராததால் தந்தை அடைக்கலராஜ் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது எந்த ஸ்பெஷல் வகுப்பும் இல்லை என்று கூறினார். அடைக்கலராஜ் மகன் Joy Manase பள்ளி முடிந்து எங்கு சென்றான் என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவன் விவரம் : A.Joy Manase (14) S/o J, அடைக்கலராஜ் உயரம் – 5.30 நிறம் கருப்பு (மாநிறம் ) உடை – கருப்பு சட்டை
(காணாமல் போன மாணவனை கண்டால் தொடர்புக்கு 🙂 அடைக்கலராஜ் (47) S/o ஜேஸ்ப் No:3 விநாயக நகர் கருமண்டபம் 3 வது தெரு திருச்சி -01. 9443978686, 8754934292
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments