கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணன் (44). இவருடைய மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கரூரில் கடந்த 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி பயின்ற தனியார் பள்ளியில் சரவணன் கணித பாட ஆசிரியராக பணியாற்றினார். இவர் நேற்று (நவ. 24) மாலை துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் நடராஜன் வீட்டுக்கு சரவணன் தனியாக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவலறிந்து வந்த துறையூர் போலீசார் நேரில் சென்று சரவணனின் உடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் நவம்பர் 19ம் தேதி கரூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், எவர் பேரும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி தற்கொலைக்கும், ஆசிரியர் சரவணன் தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா, ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார்ர் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments