Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளிகள் திறப்பு செயல்பாட்டு வழிமுறை கூட்டம் நாளை (09.08.2021) நடைபெறும் – அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஸ்….

செப்டம்பர் 1ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தான் முதல்வர் கூறியுள்ளார். நாளை இதற்காக “செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம்” முறையாக நடைபெறவுள்ளது. அதில் முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் என அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி போட்டுள்ளார்களா?  என்பதை அந்த அந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டு அதனை  உறுதி செய்து வருகிறோம். மாணவர்களது இடை நிற்றல் ( drop out) குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பட்டியல் வந்தவுடன் அதை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கட் – அவுட் பேனர்களை வைக்ககூடாது என நீதிமன்றத்திற்கு சென்றது திமுக. இதனை  திமுகவினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைபாடு. திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். கொரோனோ பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், நீட் தேர்வு எழுதுவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் மிக மிக குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர். நம்மைப் பொருத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் நோக்கம் என பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *