Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

1500 SATO குழாய்களை பஞ்சாயத்துகளுக்கு  வழங்கிய ஸ்கோப்  தொண்டு நிறுவனம்

இன்றைய நோய்தொற்று காலகட்டத்தில்  நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைப்பிடிக்கும் முக்கிய அம்சங்களில் கைகழுவுதல் மிக முக்கியமானதாகக் சுகாதாரத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் கை கழுவும் போது அதிக தண்ணீரை வீணடிக்காமல் தண்ணீரை சேமிக்கும் நோக்குடன் அதேசமயம் சுகாதாரத்துடன் பயன்படுத்தும் விதமாக 1500 ஜப்பானிய நீர் டிஸ்பென்சர்களை  திருச்சி  ஸ்கோப்  தன்னார்வ தொண்டு நிறுவனம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஊரக பஞ்சாயத்துகளுக்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுப்புராமன் கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில்  SATO தொழில்நுட்ப தண்ணீர்குழாய்கள்   என்பது மிக முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதினோம். SATO Tap என்பது வீட்டிலுள்ள எங்கும் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, ஓடும் நீர் வழங்கல் கூட இல்லாமல். “இந்த புதிய தயாரிப்பு கை கழுவுதல் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகலை விரிவாக்குவதற்கு பங்களிக்கும்.

 SATO குழாய் ஒரு முனை கொண்ட ஒரு பிளாஸ்டிக் தளத்தைக் கொண்டுள்ளது, இது பரவலாகக் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பொருத்தப்படலாம். இது கச்சிதமானது மற்றும் வீட்டிற்குள் மற்றும் பொது வசதிகளில் ஒரு கை கழுவுதல் நிலையமாக பயன்படுத்தப்படலாம். தனித்துவமான குழாய் வடிவமைப்பு குறைந்த தொடர்பை உறுதிசெய்கிறது, இதன் மூலம் நோய் பரவுவதைக் குறைக்கிறது, அதே நேரத்தில் தந்திர நடவடிக்கை நீர் பயன்பாட்டைக் குறைக்கிறது, அதாவது குறைவான மறு நிரப்பல்களைக் குறிக்கிறது, ஆனால் நிலையான ஓட்டத்தை பராமரிக்கிறது.

 எனவே இதனை பள்ளிகளுக்கு வழங்க  முயற்சித்தோம் ஆனால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இதனை பஞ்சாயத்துகளுக்கு வழங்கிட முடிவுசெய்தோம்.
  ஒரு லிட்டர்,அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களையும் பயன்படுத்தலாம்.சாடோ குழாயில்  அந்த பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.நெம்புகோல்  அழுத்தும்போது
அடுத்து சுமார் பத்து விநாடிகளுக்கு தண்ணீர் வரும்.

யுனிசெப் முறையால் பரிந்துரைக்கப்பட்ட படி கைகளை கழுவ பயனருக்கு போதுமான நேரம் கொடுக்கப்படும்.நீர் வெளியேற்றம் படிப்படியாக நிறுத்தப்படும் ஜப்பானிய அடிப்படையிலான லிக்ஸில் தயாரித்த குழாய்களினை பயன்படுத்துவதன் மூலம் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *