திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கோப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கோவில் இடத்தில் இயங்கி வந்த ஸ்ரீ வைஜெயந்தி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை கலெக்டர் மூடுவதற்கு உத்தரவிட்டு, இன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் ), தாசில்தார், காவல் அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அரசு இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் இது போன்ற பள்ளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கும்பகோணம் தீ விபத்து போல் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி மூடப்பட்டமைக்கு கோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் கல்வித்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments