தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பவர்கள் கடைகளில் உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் மேஜர் சரவணன் சாலையில் உள்ள பிரபலமான பீடா கடையில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது 3 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து உணவு மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் முகேஷுக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அபராத தொகையை கட்டி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
திருச்சி மாநகரில் உள்ள பீடா கடைகளுக்கு இங்கு இருந்து தான் புகையிலை பொருட்கள் அதிக அளவில் சப்ளை செய்யப்பட்டதாக சோதனையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments