திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் நாகநாதர் டீ ஸ்டால் செயல்பட்டு வருகிறது. அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து அந்த கடையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த தால் கடந்த 11-ம் தேதி ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் குட்கா பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சோதனை செய்த மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு அந்த கடைக்கு சீல் வைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments