திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அளுந்தூர் கிராமம், சர்வே எண் 135-ல் அமைந்திருக்கும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களும் நீர்நிலையை (குளம்) முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி கல்வி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின் படி நீர்நிலையில் கட்டப்பட்ட மூன்று பள்ளிகளை அகற்ற உத்தரவு வழங்கி உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு படி மேற்படி மூன்று பள்ளிகளை இடிக்க உள்ளதால் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று
கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நாகமங்கலம் சமுதாய கூடத்தில் ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் முன்னணியில் கூட்டம் நடைபெறுகின்றது.
மேற்படி மூன்று பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments