திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம், கொலக்குடி ரோடு, மனமேடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மளிகை மற்றும் திருச்சி, பெட்டைவாய்தலை, மெயின் ரோடு பகுதியில் உள்ள திருப்பதி மளிகை ஆகிய கடைகளில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை ஆணையர் R.லால்வேனா, அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் மேற்கண்ட இரண்டு கடைகள் சீல் செய்யப்பட்டது.
தொட்டியம் வட்டாரம், கொலக்குடி ரோடு, மனமேடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மளிகை கடையில் (17.03.2022) மற்றும் (28.11.2022) ஆகிய தேதிகளிலும், திருச்சி, பெட்டைவாய்தலை, மெயின் ரோடு பகுதியில் உள்ள திருப்பதி மளிகை கடையில் (18.11.2022) மற்றும் (28.11.2021)-ம் ஆகிய தேதிகளில் மேற்கண்ட கடைகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு அரசுகணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உணவுபாதுகாப்பு ஆணையர் உயர்திரு.R.லால்வேனா,IAS., அவர்களின் அவசர தடையாணை உத்தரவின் அடிப்படையில் மேற்கண்ட இரண்டு கடைகளும் நேற்று 08.12.2022 சீல் செய்யப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு அவர்கள் கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்தநிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments