துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இரண்டு பயணிகளை தனியாக அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை செய்தனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த ஆரோன் பாஷா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவா ஆகிய இரு பயணிகள் தங்களது உடல் மற்றும் உள்ளாடைகளில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த 1.02 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்கம் ஆகும். அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments