திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில்
சாலை ஓரமாக ஒரு சுவற்றை ஒட்டி தார்பாய் போட்டு ஒரு பெரிய மூட்டைகள் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் யாருடையது என்று அருகில் விசாரித்த பொழுது யாரும் அதற்கு தங்களுடையது என்று தகவல் தெரிவிக்கவில்லை .உடனடியாக தார்ப்பாய் எடுத்து பார்க்கும் பொழுது மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
திருச்சி மாநகர் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நிகழ்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில் திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில் 20 மூட்டை ரேஷன் அரிசி சாலையின் ஓரமாக தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை நீதிமன்ற அமர்வு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி இதேபோல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றுவது நடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறை விசாரணை தெரிவித்துள்ளனர். ரேஷன் அரிசியை இப்பகுதியில் கடத்துவது வாடிக்கையாக உள்ளது என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments