தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவல் அதிகரித்ததால், மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
இதனால், பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு பதிந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் சென்றுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து வெடி சத்தம் கேட்டவுடன் உடனடியாக போலீசார், அந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
உடனே அவர்கள் வைத்திருந்த பையை போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டனர். ரோந்து போலீசார் பையை எடுத்து சோதனை செய்த போது, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் 7 பாட்டில்களில், தடை செய்யப்பட்ட கள் இருப்பதும், அதில் ஒரு பாட்டிலில் இருந்த கள் புளித்து, அதிலிருந்து வெளியான கேஸ் காரணமாக பாட்டில் வெடித்தது தெரியவந்தது. போலீசார், அந்த கள்ளை கீழே ஊற்றி அழித்ததோடு, தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments