Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி-திருநங்கை ரெஹனாபானு

திருநங்கை ரெஹனா பானு திருச்சி பாலக்கரை ஆழ்வார்த்தோப்பு பகுதியை சேர்ந்தவர். தாயார் சைதானி இல்லத்தரசி. தந்தை ஷேக் தாவுத், ஆட்டோ டிரைவர் ஆவார். உடன் பிறந்த ஒரு சகோதரி, சகோதரன் உள்ளனர். நவல்பட்டில் உள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெரும் ரெஹனா பானு போலீஸ் பணிக்கு தேர்வான திருச்சியை சேர்ந்த முதல் திருநங்கை ஆவார்.

திருநங்கை ரெஹனாபானு கூறியதாவது : நான் பிளஸ்-2 படிக்கும் போது எனக்கு உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டது. படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டு, தனித்தேர்வராக பிளஸ்-2 எழுதி தேர்ச்சி பெற்றேன். நிறைய படிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதுசமயம் பொருளாதார சூழலால் முடியாமல் போயிற்று. ஆனால் என்னுடைய தன்னம்பிக்கையால் 

கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தேன். 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்.

இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நான், எனது பெற்றோர் தந்த ஆதரவினால் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி எடுத்தேன். அதற்கு கிடைத்த வெற்றிதான் போலீசாக நான் தேர்வாகி இருப்பது. தற்போது கடந்த 1 மாதமாக திருச்சி நவல்பட்டில் உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியில் போலீசுக்கான பயிற்சி எடுத்து வருகிறேன். இன்னும் 7 மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன். எனவே, திருநங்கைகள் எல்லோரையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறு. என்னைப்போல திருநங்கைகள் பலரும் விடா முயற்சியை கைவிடாது இருந்தால் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வரமுடியும்.

இன்னும் சில ஆண்டுகளில் எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகும் அப்படி ஒரு நிலை உருவாகுவதற்கு திருநங்கைகளாக நாமும் நம்முடைய விடாமுயற்சியாலும் நம்முடைய கல்வி அறிவாலும் உயர் பதவிகளில் பணியாற்ற வேண்டும்  இவ்வாறு அவர் தெரிவித்தார். திருநங்கைகள் தினத்தையொட்டி, தலைசிறந்த உழைப்பாளி திருநங்கைகள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு, கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. ரெஹானாவும் தேர்வுசெய்யப்பட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *