திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் சமுதாய கூடத்தில்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பணி குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய படியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வானாள் வரை கற்றல் துறை மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் இணைந்து மரம் நடுவோம் புவி காப்போம் என்ற தலைப்பில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் சமுதாயக்கூடத்தில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாணாள் வரை கற்றல் துறையின் துறை தலைவர் குமுதவல்லி தலைமை வகித்தார்.நிகழ்வில் மரம் நடுவோம் புவி காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு , மரம் நடுதல் அதன் பராமரிப்பு நடைமுறைகளை குறித்து விவாதித்தனார் .இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழு மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் புவியை காக்க நெகிழி பையை பயன்படுத்தாமல் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும் இவ்விழாவில் நிகழ்ச்சிகள் பங்கு பெற்றவர்களுக்கு துணிப்பையும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.அதேபோல் அப்பகுதியில் 50 மரங்கள் நடப்பட்டன.மேலும் இப்பகுதியில் 500 மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் வரை கற்றல் துறை மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments