திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், மணமேடு கிராமத்தில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாயிலாக வீடு வீடாகச் சென்று மக்களிடமிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனித்தனியே தரம் பிரித்து வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (3.9.22) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன், மகளிர் திட்ட இயக்குனர்ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, ஊராட்சித் தலைவர் தண்டபாணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments