Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் தண்ணீருக்கு தனியாக ஸ்பெஷல் வரி வசூல்

பொதுவாக மக்கள் தற்பொழுது வாங்கும் பெரும்பாலான பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி என்பது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. பில்லுடன் வாங்கும் பொருட்களுக்கு அப்பொருளின் விலை மற்றும் மாநில வரி, மத்திய வரி சேர்த்து பொருளின் விலை மொத்தமாக கணக்கிடப்படும்.  சில பொருட்களை வாங்கும்பொழுது அதற்கான முறையான கணக்குகளை காண்பித்து அதற்கான தொகையை ஆடிட்டர் மூலம் வருமானவரி துறையில்  வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து திரும்ப பெறலாம்.

ஆனால் தற்பொழுது தண்ணீருக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. குடிக்கும் தண்ணீருக்கு மாநில மற்றும் மத்திய வரி செலுத்தி அதன் பிறகு தனியாக தண்ணீர் வரி என ரவுண்ட் ஆஃப் செய்து நுகர்வோரிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. 5லிட்டர் தண்ணீர்க்கு  67 ரூபாய் 80 பைசா என சரக்கு சேவை வரியுடன் தொகை பெறவேண்டும். ஆனால்  70 ரூபாய் என மூன்றாவதா தனியாக ஒரு வரியை சேர்த்து நுகர்வோரிடம் வாங்கியுள்ளனர்.

இப்படி நடப்பது நம் திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 5 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு ரூபாய் 20 காசுகள் கூடுதலாக நுகர்வோரிடம் பறிக்கப்படுகிறது. இப்படியே சென்றால் நேரடியாக  நுகர்வோரிடம்  ஒவ்வொரு பொருளுக்கும் இவர்களே கூடுதல் தொகை வரியாக நினைத்து கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுமென குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொருவரிடம் இப்படி வசூலிக்கும் தொகை நினைத்தால்….தலைசுற்றும்.ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற நிலையில் குடிக்கிற தண்ணீர்க்கு கூடுதல் வரி என மற்ற பொருட்களுக்கும் தொடராமல் இருக்கவும் இதற்க்கும்  அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் கேட்கிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *