திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையப் பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இன்று (12.12.2021) 13-பீட் அலுவலகத்தில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய மிளகுபாறை பகுதியில் இளைஞர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமை ஏற்று அறிவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட திட்ட அலுவலர் மருத்துவர் மணிவண்ணன் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த அறிவுரைகள் கூறி போதைக்கு எதிராக போராடுவதற்காக அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் திரு சேரன் அமர்வு நீதிமன்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மற்றும் பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த 10 இளைஞர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நல்ல அறிவுரைகளைப் பெற்று, போதைக்கு எதிரான நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க தாங்கள் பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.
தகவல் தெரிவிக்க : 9498105232 / 0431-2462208
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments