கடந்த 27.08.2021 அன்று கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 15 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை செய்யப்பட்டு, கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் புலன்விசாரணையில் மகேஸ்வரன் என்பவர் பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் எனவும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வருவதால், அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.
அதன் பேரில் 28.08.2021-ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி மகேஸ்வரன் என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments