Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர்கள் 5 பேர் கைது .

திருச்சி அருகே தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர்கள் 5 பேர் கைது .

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் அப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட 9 வயது மாணவியிடம் அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு நேற்று காலை மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி இரவு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்). 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாளாளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து. மேலும் வழக்கு தொடர்பாக, வழக்கில் சம்மந்தப்பட்ட ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மேலும் காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடனடியாக ஐந்து நபர்களையும் கைது செய்து வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி

நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின்

பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *