Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

வியக்க வைக்கும் விஜய் கேடியாவின் பங்குகள் 2,200 சதவீத வருமானம்

Elecon Engineering நிறுவனமும் நான்காம் காலாண்டில் வலுவான காலாண்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் ரூபாய் 473.56 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு 21.79 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூபாய் 130.37 கோடியாக இருந்தது, இது ஆண்டு அடிப்படையில் 41.64 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

 அதே நேரத்தில் நிறுவனத்தின் (PAT)வரிக்கு பிந்தைய வருவாய் ரூபாய் 89.15 கோடியாக இருந்தது, இது ஆண்டு அடிப்படையில் 43.05 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனம் சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஹசிரா ஆலைக்கான எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியாவிடமிருந்து 82.78 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்த உள்நாட்டு ஒப்பந்தம் பெல்ட் கன்வேயர் மெக்கானிக்கல் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை தயாரித்து வழங்குவதை உள்ளடக்கியது.

1960ல் இணைக்கப்பட்ட எலிகான் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட், டேவிட் பிரவுன் கியர் சிஸ்டம்ஸைச் சேர்ந்த பென்ஸ்லர்ஸ்-ரேடிகான் குழுமத்தை கையகப்படுத்துவதன் மூலம் மெட்டீரியல் ஹேண்ட்லிங் உபகரணங்கள் மற்றும் இன்கிராஃப்ட் கேரியர்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2,200 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் எஃப்ஐஐக்கள் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர்.

பிரபல முதலீட்டாளர் விஜய் கேடியா நிறுவனத்தில் 1.47 சதவீத பங்குகளை வைத்துள்ளார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். நேற்றைய வர்த்தகத்தில் Elecon Engineering Company India Ltd இன் பங்குகள் முறையே அதிகபட்சம் 1,119.55 மற்றும் 1,028.00 ரூபாயுடன், 1,079.60 ரூபாயில் துவங்கியது. 2.16 சதவீதம் அதிகரித்து ரூபார்1,036.00-ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 1,119.55 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூபாய் 349.90 ஆகவும் உள்ளது.

நிறுவனத்தின் ROCE 24.9 சதவீதம் மற்றும் ROE 20.5 சதவீதம், சந்தை மூலதனம் ரூபாய் 11,660 கோடியாக இருக்கிறது.பங்குகள் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளன, முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

(Disclimer : மேலே உள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது தரகு நிறுவனங்களின் கருத்துக்களே முதலீட்டாளர்கள் உங்கள் ஆலோசகரை ஆலோசிக்கவும்.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *