Site Logo mobile
Search Icon
Mobile Gif
Business

அதிரவைத்த ஆஷிஷ் கச்சோலியா பங்கு 5.5 சதவிகிதம் வரை உயர்வு!!

Knowledge Marine & Engineering Works Ltdன் பங்குகள் 5.5 சதவிகிதம் உயர்ந்தது, கடல் மணலின் சப்ளை மற்றும் விற்பனைக்கான ஆர்டரைப் பக்ரைன் நிறுவனத்திடம் இருந்து பெற்ற பிறகு, ரூபாய் 1,505 என்ற அனைத்து புதிய விலை உயர்வை எட்டியது. பிற்பகல் 2:15 மணியளவில், நாலெட்ஜ் மரைன் & இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் பங்குகள், எக்ஸ்சேஞ்சில், ரூபாய் 76.50 அல்லது 5.47 சதவிகிதம் அதிகரித்து, ரூபாய் 1,475க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வர்த்தக்த்தின் இறுதியில் 3.99 சதவிகிதம் உயர்ந்து ரூபாய்1454.25க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

நிறுவனம் செபிக்கு தாக்கல் செய்த்த அறிக்கைப்படி, பஹ்ரைனில் உள்ள Knowledge Marine & Engineering Works Ltdன் துணை நிறுவனமான Knowledge Dredging Co. W.L.L, India, பல்வேறு மணல் வாங்குபவர்களிடமிருந்து நான்கு தனித்தனி ஆர்டர்களை பெற்றுள்ளது.

M/s ஹாஜி ஹசன் குழுமம், M/s TCT கடல் ஒப்பந்தம் WLL, M/s K7 ஒப்பந்தம் WLL, மற்றும் M/s அல்சலேம் ஒப்பந்தம். ஐந்தாண்டு காலப்பகுதியில் 15.45 மில்லியன் பஹ்ரைன் தினார் உத்தேசமாக 342.06 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலானது ) “அகழ்க்கப்பட்ட கடல் மணலின் சப்ளை மற்றும் விற்பனை” ஒப்பந்தம் ஆகும் இது.

நாலெட்ஜ் மரைன் & இன்ஜினியரிங் ஒர்க்ஸ் ஒரு வருடத்தில் 187 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை தந்துள்ளது. பிரபல முதலீட்டாளர் ஆஷிஷ் கச்சோலியா நிறுவனம் ஜூன் 2023-24 காலாண்டில் 3,00,000 பங்குகளை வைத்துள்ளார், இது 2.78 சதவிகிதம் ஆகும். நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு 88 சதவிகிதம் உயர்ந்து 2022-2023ம் நிதியாண்டில் ரூபாய் 79 கோடியாக உயர்ந்தது, இது 2021-2022ம் நிதியாண்டில் ரூபாய் 42 கோடியாக இருந்தது.

இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூபாய் 16 கோடியிலிருந்து 44 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 23 கோடியாக இருந்தது இந்த பங்கின் மீது ஒரு கண்ணை வைக்க சொல்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

(Disclaimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பரிந்துரை அல்ல. உங்கள் முதலீட்டு ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *