Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெண் விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் விருது வழங்கி கௌரவித்த சாஸ்த்ரா

தேசிய அறிவியல் நாளை ஒட்டி சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெண்விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது என மத்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ரேனு ஸ்வருப் தெரிவித்தார்.
 தேசிய அறிவியல் நாளையொட்டி சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை 28.02.2021அன்று நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ரேனு ஸ்வரூப் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திறன்களை  வளர்ப்பதிலும் இளம் மாணவர்களை அறிவியல் துறையில் ஈடுபடுத்துவதிலும் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றால் அது மிகையன்று.

 நாட்டின் அறிவியல் வளர்ச்சி அதன் சூழ்நிலையை பொறுத்தது கண்டுபிடிப்புகளும் புதிதாக தொடங்கப்படும் சிறு கம்பெனிகளும் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன மேலும் வேகப்படுத்த என குறிப்பிட்டார் .சாஸ்த்ரா  நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வைத்தியசுப்பிரமணியம் தனது வரவேற்புரையில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை போற்றும் மரபு சாஸ்த்ரா தொடர்ந்து பேணி வருகிறது என்றார் .

 இதில் தில்லி ஐஐடி முன்னாள் பேராசிரியர் அஜோய் கதக்குக்கு  சாஸ்த்ரா ஜி.என்  ராமச்சந்திரன் விருது, தில்லி தேசிய தாவர மரபு நிறுவனத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி யாதவுக்கு சாஸ்த்ரா ஒபைத்சித்திக் விருது வழங்கப்பட்டது.
 2021 ஆம் ஆண்டில் வேதியியல், பொருள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதாக ஐஐடி பேராசிரியர் ஏ.கே  கங்குலிகக்கும்,பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியருக்கும் ஜி. முகேஷ்க்கும் சாஸ்த்ரா சி.என்.ஆர் ராவ் விருது வழங்கப்பட்டது.

 உடன் தலா ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டது. முனைவர் பட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டு ,நான்காம் ஆண்டு படிப்பவர்களுக்குசாஸ்த்ரா சந்திரசேகர் அமைப்பு இணைந்து சரோஜ் சந்திரசேகர் விருதை வழங்கி வருகின்றனர். நிகழாண்டு கான்பூர் ஐஐடியில் சேர்ந்து மது சதுர்வேதி நிஷாந்த் மனுஷர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சயன்ததாசி சின்ஹா ஆகியோருக்கு இவ்விருதும் தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. மேலும் சாஸ்த்ரா சேர்ந்த ரம்யா காண்பூர்ஐஐடி சேர்ந்த அகன்ஷா ஓங்கரை கவுரவப்படுத்தும் வகையில் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரூஹி மொஹிதீனுக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்பட்டது.  

சாஸ்த்ராவில் உயிரி தொழில்நுட்பத் துறையின் ரூபாய் ஏழு கோடி நிதி உதவியுடன் தொழில்நுட்ப வணிக வளர்ப்பகமான அப்லெஸ்ட்  என்கிற அமைப்பை ரேனு ஸ்வருப் திறந்துவைத்தார் நிறைவாக முதன்மைத் திட்டம் மற்றும் பயன்பாடு எஸ் சுவாமிநாதன் அவர்கள் நன்றி கூறிவிழாவை நிறைவு செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *