Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நீதிமன்ற போட்டிகளில் 5 முறை சாஸ்திரா சட்டப்பள்ளி வெற்றி

கே .ஆர் .ரமாமணி வரி மூட்  நீதிமன்ற போட்டிகள் – ஐந்து ஆண்டுகளாக  வெற்றிவாகைச்சூடிய  சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் நடத்திய கே.ஆர் ரமாமணி  வரி மூட் நீதிமன்ற  போட்டியில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பள்ளி வெற்றி பெற்றுள்ளது.
 இப்போட்டியில் சாஸ்த்திராவிலிருந்து கலந்துகொண்ட பிரதிக்க்ஷா ஈஸ்வர், அரவிந்தினி ,கவிதா ரவி பெண்கள் அணி  மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்போட்டியில் வாதிட  வழங்கப்பட்ட தலைப்பு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 40 பற்றிய சிக்கலான ஒன்றாகும். இப்போட்டியில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 30 அணியினர் கலந்து கொண்டனர் .

காலிறுதி சுற்றில் புனேவின் சிம்பயாசிஸ் திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட மையம் ஒன்று மற்றும் சட்டத்துறை  RGNUL பஞ்சாப்,கிரைஸ்டடு பல்கலைக்கழகம் பெங்களூர்,அகமதாபாத் நிர்மா பல்கலைக்கழகம்,NILU போபால்  என பலர் பங்கேற்றனர் அரையிறுதி சுற்றில் ஆயத்தப் போட்டியில் சாஸ்திர ஒரு தேசிய சட்டப்பள்ளியையும் பின்னர் கிரைஸ்டடு  பல்கலைக்கழகத்தையும் வீழ்த்தியது .

 இறுதி சுற்றில் சாஸ்த்திரா சட்டப் பள்ளி NILU வை வீழ்த்தி இறுதி போட்டியை வென்றது.கே. ஆர் ரமாமணி மூட் நீதிமன்ற  போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது இதில் கடந்த 8 ஆண்டுகளில் 5 முறை சாஸ்திரா சட்டப்பள்ளி இப்போட்டியில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் தினத்தில் இந்த  போட்டியில் வெற்றி கண்ட மாணவிகளுக்கு  வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் இரட்டிப்பபாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *