Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பளபளக்கும் அரசு பள்ளி – பங்களிப்பு வழங்கிய ஆனமலைஸ் டொயோட்டா

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட திருவளர்சோலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை வசதி வேண்டி பள்ளி மேலாண்மை குழு மூலமாக பலமுறை தீர்மானம் இயற்றப்பட்டது.

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் திருவானைக்காவல் ஆனமலைஸ் டொயோட்டா நிறுவனத்தினர் பள்ளிக்கு 3 பெண்கள் கழிவறை மூன்று ஆண்கள் கழிவறை சிறுநீர் கழிப்பிடம் ஆகியவற்றைக் கட்டி வழங்கியதோடு பள்ளியின் அனைத்து கட்டிடங்களுக்கும் வர்ணம் தீட்டி பள்ளியை பளபளப்பாக மாற்றியுள்ளனர். இன்று (19.06.2024.) புதிய கழிவறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக திருச்சி ஆனமலைஸ் டொயோட்டா நிர்வாக இயக்குனர் C.S. சித்தார்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பள்ளியானது புதிய வர்ணம் தீட்டப்பட்டு வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் வகுப்பறை தோறும் வண்ணக் கோலங்கள் இட்டு மாணவர்கள் வண்ண வகுப்பறையையும் புதிய கழிவறையையும் கண்டு உள்ளம் பூரித்து மகிழ்ச்சி அடைந்தனர். விருந்தினர்களை சாரணர் இயக்க நீலப் பறவையர் வரவேற்றனர். முதல் வகுப்பில் சேர்ந்த புத்தம் புது மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் வை.ராஜேஸ்வரி வரவேற்புரை நிகழ்த்தினார். வெங்கடாஜலபதி ஆனமலைஸ் டொயோட்டா இறைவணக்கக் கூட்டத்தில் தேசியக்கொடி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு கா.மருதநாயகம் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். எஸ்.ஸ்டான்லி ராஜசேகர் வட்டாரக் கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார். ஜெயபாரதி உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் கோட்டம், கு.மீனா வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ), இளநிலை பொறியாளர் பாலமுருகன், 6வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் கலைமணி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.  

S.அந்தோணி ராஜ் Asst. General Manager, மோகன்குமார் Service Manager, பாலகுமார் Vice President Service (Zone), ஆனந்த் Civil Supervisor, G.சரவணன் Group Trainer, சந்தோஷ் Accounts Manager, பரணிதரன் Vice President Sales முதலான ஆனமலைஸ் டொயோட்டா ஊழியர்கள் பத்மாவதி ஆசிரிய பயிற்றுநர், பெல்சிட்டா மேரி ITK ஒருங்கிணைப்பாளர் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நிர்மல் கரோலின் பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சத்யநாராயணா,

காலை உணவு திட்ட தன்னார்வலர் ஆரோக்கியமேரி, NILP தன்னார்வலர் S. ரூஸ்வெல், வார்டு துணை செயலாளர் விஜயராஜ், ஊர் பிரமுகர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆசிரியை பர்வதவர்த்லினி நன்றியுரை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *