காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், உத்தரவின் படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி (11.04.2023) இன்று பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் காவல்துறை சுப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், முதல் இடத்தையும் மற்றும் ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளார்.

பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி முதல் இடத்தை பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டியில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் முதல் இடத்தை பிடித்தார்.
இதில் வெற்றி பெற்றுள்ள அதிகாரிகள் மாநில அளவிலான காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
388
11 April, 2023










Comments