திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் திருநாளான இன்று நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரிய பெருமாள், நம்பெருமாள்,
உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது) அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல் அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி,
பின் சேவையாக அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
முன்னதாக ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த நம்பெருமாளை ரங்கா ரங்கா என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments