திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பார்த்தசாரதிக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்க்கார் பாளையம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பேனர் வைத்ததில் திமுக ஒன்றிய கவுன்சிலருக்கும் பனையக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவரின் அம்மாவுக்கும் அரிவாள் வெட்டு. இரண்டு தரப்பிலும் வீடுகள் சூறையாடப்பட்டன. காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி பதட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள் ஒரே பிரிவினர் மோதிக்கொண்டதால் பதட்டம் நீடிக்கிறது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments