திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளதாவது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் தேசிய சித்தமருத்துவ நிறுவனம் தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் வாக்-ரன் போட்டிகள் திருச்சியில் வரும் 8ம் தேதி நடக்கிறது.
15 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் நீதிமன்றத்தில் தொடங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அஞ்சல் அலுவலகம் கேம்பியன் பள்ளி கோர்ட் வழியாக மீண்டும் எம்ஜிஆர் சிலை வந்தடைகிறது முன்பதிவு இல்லாமல் நடத்தப்படும் வாக் ரன் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-ஷர்ட் வழங்கப்படும்.
ஒவ்வொரு வயது பிரிவிலும் முதல் வரும் இரண்டு பேருக்கு பரிசு வழங்கப்படும் இரண்டு கிலோமீட்டர் நடை ஓட்டம் உள்ளிட்ட பிரிவுக்கான வாக்காத்தான் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருச்சி மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையில் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். dsmoofficetrichy@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.
மேலும் தகவலுக்கு 9942735935, 9443219998 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இதனை தொடர்ந்து கருமண்டபம் எஸ்பிஎஸ் மஹாலில் மூலிகை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைக்கிறார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments